மீன்வள உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்க சென்னை கலெக்டர் அழைப்பு
பைல் படம்
சென்னை மாவட்ட ஆட்சியா் விஜயாராணி இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் கட்டுப்பாட்டில் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வளஉதவியாளா் பணியிடத்தை பொதுப்போட்டி (முன்னுரிமைபெற்றவா்) பிரிவில் தகுதியின் அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
30 வயதுக்குள்பட்ட பொதுப்பிரிவினா் (தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரை) உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவா்கள், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்), சென்னைஅலுவலகம், டிஎம்எஸ் வளாகம் 3வது தளம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு, வருகிற ஆக.2ம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-2432 8596 என்ற எண்ணை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu