பிரபல நடிகர் நெல்லை சிவா காலமானார்

பிரபல நடிகர் நெல்லை சிவா காலமானார்
X
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா வயது (65) திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள வேப்பிலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நடிப்பு ஆசையால் சென்னை வந்தவர்.

'ஆண்பாவம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுக மானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நெல்லை சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த நெல்லை சிவா, அவர் பேசும் திருநெல்வேலி வழக்குக்காகக் கவனிக்கப்பட்டவர். ஊரடங்கு காரணமாக தற்போது சொந்த ஊரில் இருந்த நெல்லை சிவாவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தார்.

அவர் இறுதிச்சடங்கு பணகுடியில் இன்று நடக்கிறது. நெல்லை சிவாவா இறந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா