சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை
X
சென்னையில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில், அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வேப்பேரி, எழும்பூர் மற்றும் என்.எஸ்.சி போஸ் சாலை உள்ளிட்ட, 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில், தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!