மின்னணு இயந்திரங்களில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை

மின்னணு இயந்திரங்களில் முறைகேடுக்கு வாய்ப்பில்லை
X
- சத்யபிரதா சாகு உறுதி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு தபால் வாக்கு முதலில் எண்ணத் துவங்கப்படும். அதே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். 14 மேஜைகள் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பெரிய தொகுதிகளுக்கு 30 மேஜைகள் வரை கொண்டு வாக்கு எண்ணிக்கை இருக்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக பத்திரமாக காவல்துறை உதவியுடன் பாதுகாப்புடன் இருக்கிறது. அதில் எந்த தவறும் இதுவரை நடைபெறவில்லை அப்படி ஏதேனும் புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

234 தொகுதிகளுக்கும் 234 பொது பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பார்கள். அத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல்முறையாக ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. அது ஒரு கால்குலேட்டர் போல தான். வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகில் கண்டெய்னர் வந்தது தொடர்பான விசாரணையில், அது பள்ளிகளுக்கான கழிப்பறை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது, தவிர அதில் வேறு எந்த ஒரு செயல்பாடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!