செஃப் தாமுவுக்கு லண்டனில் உலக சாதனையாளர் விருது: சென்னையில் உற்சாக வரவேற்பு
லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் உலக சாதனையாளர் விருது பெற்று சென்னை திரும்பிய செஃப் தாமு விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நவம்பர் 5-ம் தேதி உலக தமிழ் சங்கத்தின் சார்பாக உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடத்தினர்..
இந்நிகழ்ச்சியில் செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் தமிழகத்தை சேர்ந்த கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட முதல் விருது இதுவாகும். இந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை வந்த செஃப் தாமு கூறுகையில்:- ஒரு தமிழனுக்கு இலண்டனில் அங்கீகாரம் கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது.
என்னுடைய பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை பார்க்கிறேன். இந்த பிரிவில் முதல் விருதை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும்.மேலும் இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும்.
கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு இது மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu