மதுசூதனன் கவலைக்கிடம்; அடுத்த அதிமுக அவைத்தலைவர் இவரா?

மதுசூதனன் கவலைக்கிடம்; அடுத்த அதிமுக அவைத்தலைவர் இவரா?
X

பைல் படம்

மதுசூதனன் கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக அவைத் தலைவராக இருந்து வரும் மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மதுசூதனன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போது முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் உள்பட ஒருசிலர்தான் அதிமுகவில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ளனர். மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சி.பொன்னையனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆகவே இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் கட்சி தலைமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
why is ai important to the future