வி.சி.க. நிர்வாகி மிரட்டியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க. புகார்

வி.சி.க. நிர்வாகி மிரட்டியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க. புகார்
X

தில்லை கருணாகரனின் சமூக வலைத்தள பதிவு

வி.சி.க. நிர்வாகி சமூக வலைத்தளத்தில் மிரட்டியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருப்பவர் நாராயணன் திருப்பதி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசியது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில் திருமாவளவன் தி.மு.க. காங்கிரஸ் உடனான கூட்டணி தொடர வேண்டும் இல்லையென்றால் அது பா.ஜ.க.விற்கு சாதகமாகி விடும் என கூறிய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வளர்ந்து வரும் பா.ஜ.க.வை பார்த்து பார்த்து திருமாவளவன் பயப்படுகிறார் என பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தில்லை கருணாகரன் என்பவர் அட சங்கி நாராயணா விடுதலை சிறுத்தை கட்சி நினைத்தால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் நடமாட முடியாது, உன் வீட்ல வந்து உன் வாயிலே வெட்டுவோம், ஆனால் எங்க தலைவர் எங்களை அப்படி செய்ய விடமாட்டார், அதனால நீ அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், இல்ல இது தான் நீ போட்ட கடைசி ட்விட்டர் பதிவாக இருக்கும் என, வீடு புகுந்து வெட்டுவோம் என கமெண்ட் செய்திருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனக்கு சமூகவலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தில்லை கருணாகரனை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!