தமிழகத்தில் 9 பதிவுத்துறை டி.ஐ.ஜிக்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 9 பதிவுத்துறை டி.ஐ.ஜிக்கள் பணியிட மாற்றம்
X

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி (பைல் படம்)

தமிழகத்தில் 9 பதிவுத்துறை டி.ஐ.ஜிக்கள் மற்றும் 4 ஏ.ஐ ஜிக்களை பணியிட மாற்றம் செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் 9 பதிவுத்துறை டி.ஐ.ஜிக்கள் மற்றும் 4 ஏ.ஐ.ஜிக்களை பணியிட மாற்றம் செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

* கடலூர் மண்டலம் டி.ஐ.ஜி ஆக ஜனார்த்தனம் நியமனம்,

* தஞ்சாவூர் மண்டல டி.ஐ.ஜி ஆக ஆனந்த் நியமனம்,

* சேலம் மண்டலம் டி.ஐ.ஜி ஆக பிரபாகர் நியமனம்,

* வேலூர் மண்டல டி.ஐ.ஜி ஆக அருள்சாமி நியமனம்,

* சென்னை பதிவுத் துறை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக வாசுகி நியமனம்

* மதுரை மண்டல டி.ஐ.ஜி ஆக ஜெகதீசன் நியமனம்,

* சென்னை மண்டல டி.ஐ.ஜி ஆக சேகர் நியமனம்,

* கோவை மண்டல டி.ஐ.ஜி ஆக சுவாமிநாதன் நியமனம்,

* திருச்சி மண்டல டி.ஐ.ஜி ஆக லதா ஆகியோர் நியமனம்,

மேலும் , அங்கயற்கண்ணி (புலனாய்வு), சீனிவாசன் ( வழிகாட்டுதல்), முகம்மது ஜாபர் சாதிக், (சிட்ஸ் மற்றும் சங்கங்கள்) நல்லசிவன் (முத்திரைகள் மற்றும் பதிவு) ஆகியோர் சென்னை ஐ.ஜி அலுவலக ஏஐஜிக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!