தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் வைகோ எம்பி நேரில் மனு
வைகோ எம்பி (பைல் படம்)
மத்திய ரயில்வே அமைச்சரிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி நேரில் அளித்த கோரிக்கை மனு விவரம்:
தென்காசி மாவட்டத்தின் பழைமையான கரிவலம்வந்தநல்லுர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் .இராஜபாளையம் - சங்கரன்கோவில் மார்க்கத்தில் 32 கிமீ தூர இடைவெளியில் வேறு ரயில் நிலையங்களே இல்லாத நிலையில் கரிவலம் இரயில் நிலையம் திறக்கப்பட்டால், அந்த வழித்தடத்தில் பயண நேரம் குறையும்.
காசிக்கு இணையான புகழ் பெற்ற பால்வண்ணநாதர் பெயர் தாங்கிய சிவ ஆலையம் இங்கு பெற்றுள்ளது. சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 24 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பயன் பெறுவர்
என்பதையும், 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதையும், பாழடைந்து கிடக்கின்ற பணியாளர் குடியிருப்புகள் சீரமைக்கப்பட்டு தனி பயணச்சீட்டு மையம் திறக்க நடவடிக்கை வேண்டும் .
அதே போல் தமது சொந்த ஊர் கலிங்கப் பட்டிக்கு நெருக்கமான தூரத்தில் கரிவலம் இரயில் அருகில் உள்ளது என்பதையும், கங்கை நதிக்கு இணையான சிறப்புடைய நிச்சேப நதிக்கரையில் கரிவலம் அமையப் பெற்றுள்ளது என்பதையும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உடல் எரியூட்டப்பட்ட புனிதச் சாம்பல் இந் நதியில் கரைக்கப்பட்டது.
கோரிக்கை 2..இரயில்வே துறை இயக்கியுள்ள நெல்லை - சென்னை வந்தே பாரத் இரயில் தென் மாவட்ட மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.. இந்த ரெயிலை மக்களின் வசதிக்கான தெற்கு ரயில்வேக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் வர்த்தக நகரம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 21.09.2023 நாளிட்ட கடித வாயிலாகவும், நேரிலும், வலியுறுத்தினேன்.பொதுமக்களும், வர்த்தகர்களும் அன்றாடம் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதி முக்கியத்துவம் வாய்ந்த இக் கோரிக்கையினையும் விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் ..
கோரிக்கை 3 :ஈரோடு - திருநெல்வேலி (இரயில் எண்கள் 16845 | 16846) இரயிலைதிருநெல்வேலியில் இருந்து பத்தமடை, சேரன்மகாதேவி, கல்லடைக்குறிச்சி அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்ச் சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டித்து இயக்கிட வேண்டும்..இப்பகுதி மக்களுக்கு ஈரோடு வழி செல்ல இது தான் முதல் வாய்ப்பு என்பதை கருத்திற் கொண்டு நீட்டிப்பு வழங்கிட வலியுறுத்தி வைகோ கடிதம் அளித்தார்.
இந்நிகழ்வில், ஈரோடு கழக நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,தலைவரின் டெல்லி செயலாளர்அ செந்தூர்பாண்டியன் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu