தமிழகத்தில் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

தமிழகத்தில் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
X

பைல் படம்

தமிழகத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் போதிய பயணியர் வருகை இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட 20 சிறப்பு ரயில்களை ஜூன் 20, 21 ஆகிய நாட்களில் இருந்து மீண்டும் இயக்க உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு,

சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் ரயில், தென்காசி, செங்கோட்டை வழியே சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள், கோயம்புத்தூர் - நாகர்கோவில் இடையிலான இரவு நேர விரைவு ரயில்கள், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையிலான விரைவு ரயில்கள் மற்றும் புனலூர் - மதுரை விரைவு ரயில், சென்னை எழும்பூர் - திருச்சி விரைவு ரயில்கள் ஆகியனவும் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai automation in agriculture