விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த  கால அவகாசம் நீட்டிப்பு
X
பைல் படம்
விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப் படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு புதிய சட்டத்தை கொண்டு வந்தது.

அதன்படி, விதிமீறி கட்டப்பட்ட கட்டி,டங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர், வழக்கமான வளர்ச்சிக்கட்டணம், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள தளப்பரப்பு குறியீடுகளுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டுக் கட்டணம், வாகன நிறுத்துமிட குறைபாடு கட்டணம், திறந்தவெளிப் பகுதி விதிமீறல்களுக்கான கட்டணம் போன்றவற்றை செலுத்தி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.

இதற்காக செப்டம்பர் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil