இந்தியாவில் பாஜக ஆட்சியை அகற்றுவது தான் பெரியாருக்கு உண்மையான அஞ்சலி

இந்தியாவில் பாஜக ஆட்சியை அகற்றுவது தான் பெரியாருக்கு உண்மையான அஞ்சலி
X

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

பாஜக ஆட்சியை அகற்றுவது தான் பெரியாருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

தந்தை பெரியாரின் 48 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை வேப்பரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கூறியதாவது.

பெரியாருக்கு உண்மையான அஞ்சலி என்பது இந்தியாவில் பாஜக ஆட்சியை அகற்றுவது தான் எனவும்.. ஏனென்றால் சாதி மதமற்ற ஒரு சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக மிகக் கடுமையாக போராடியவர் பெரியார் .

ஆனால் இன்றைக்கு மத்தியில் ஆட்சி செய்கின்ற மோடி அரசு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் சாதியாலும் மதத்தாலும் பிரித்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்று நாடகமாடி கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதை ஒழிப்பது தான் கடமையாக இருக்க வேண்டும் என இந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்