17ம் தேதி முதல் முழு நேர அன்னதான திட்டம்: அமைச்சர் சேகர்பாபு உறுதி

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
சென்னை புரசைவாக்கத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கி அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கொரோனா தடுப்பூசி ஒரு இயக்கமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். அறநிலையத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், செயல் பாபு என முதலமைச்சர் என்னை கூறியது ஊக்கமளிப்பதாக உள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல எல்லாப்புகழும் முதலமைச்சருக்கே.
அனைத்து வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்துவோம்.திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதானம் திட்டம் வரும் 17ம் தேதி தொடங்கப்படும்.
நீட் தேர்வால் தற்கொலை போன்ற முடிவுகளை மாணவர்கள் கைவிட வேண்டும். முதலமைச்சர் விரைவில் சட்ட போராட்டத்தின் மூலம் நீட் தேர்வு ரத்து செய்வார் எனவும், தற்கொலை தீர்வு அல்ல. அறநிலையத்துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்தாண்டு மானிய கோரிக்கைக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu