இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது  என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
X

டாஸ்மாக் கடை கோப்பு படம்.

மற்ற கடைகள் மட்டுமே திறந்திருக்கும். இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் காரணமாக தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் பால், மருந்து பொருட்கள், குடிநீர், பத்திரிக்கை உள்ளிட்டவற்றின் விநியோகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நலன் கருதி நேற்று இரவு 9 மணி வரை மற்றும் இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதிக்கவில்லை. அதேபோல் இன்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி