தமிழக அரசு வெளிப்படைத் தன்மைதேயாடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு!
சென்னை பெரியார் திடலில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சேகர்பாபு, திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, தயாநிதி மாறன் எம்பி திறந்து வைத்தனர்.
சென்னை பெரியார் திடலில் 40 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வை த்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழக அரசு 49 சித்த மருத்துவ முகாம்களை திறந்துள்ளது. தற்போது பெரியார் திடலில் 50-வது சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட மருத்துவர்கள் இங்கு பணிபுரிவார்கள் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதலாம் அலை இருந்த போது 13 சித்த மருத்துவமனைகள் இருந்தன. தற்போது 50 மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் கோருபவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. கோவில் சொத்துக்களை கூட இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் வெளிப்படையாக அரசு செயல்பட்டு வருகிறது. இறப்பு சதவிகிதத்தை குறைத்து காட்டவில்லை. இது அரசியல் செய்யும் நேரமில்லை.
அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. கடந்த ஆண்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தபோது எதிர்கட்சிகள் என்ன மருத்துவர்களா என எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி கேள்வியெழுப்பினார். ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சிகளையும் ஒன்றினணைத்து செயல்படுகிறார் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu