கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை
X

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய ரெம்டெசிவிர் என்ற மருந்து தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனையாகி வருகிறது. இங்கு ரெம்டெசிவிர் மருந்து அரசின் உரிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் திரள்கிறார்கள். இந்த நிலையில்2 மையங்களில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் அதிகமாக இருப்பதால் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி அவர்கள் தெரிவித்துள்ளார்

அதன்படி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் 2 மையங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்றும் இதன் மூலம் நெரிசல் இன்றி பொதுமக்கள் இந்த மருந்தை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!