தனியார் திருமண மண்டபத்திற்கு ரூ.30,000 அபராதம் : சென்னை மாநகராட்சி அதிரடி

தனியார் திருமண மண்டபத்திற்கு ரூ.30,000 அபராதம் : சென்னை மாநகராட்சி அதிரடி
X

பைல் படம்

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தை சென்னை மாநகராட்சி விதித்தது.

சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் 50 நபர்களுக்கு மேல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர்.

இதனை ஆய்வு செய்த ராயபுரம் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் முக கவசம் அணியாமலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் மண்டப உரிமையாளருக்கு ரூபாய் 30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!