தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதால் மலைப் பகுதிகளில், மழை பெய்து, மண் சரிவு ஏற்படக் கூடும், வானிலை மையம்

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதால்  மலைப் பகுதிகளில், மழை பெய்து, மண் சரிவு ஏற்படக் கூடும், வானிலை மையம்
X

வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன்

தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைவதால் மலைப் பகுதிகளில், மழை பெய்து மண் சரிவு ஏற்படக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக

10.07.2021: கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,

திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

11.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,

திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

12.07.2021 : நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கோயம்புத்தூர், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென்காசி, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

13.07.2021, 14.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

குறிப்பு:10.07.2021முதல்12ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதனாலும் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கவும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

கழியல் (கன்னியாகுமாரி) 11, குழித்துறை (கன்னியாகுமாரி) 10, கன்னியாகுமாரி, சின்னக்கல்லார் (கோவை) தலா 9, மைலாடி (கன்னியாகுமாரி), வால்பாறை PTO (கோவை), காட்பாடி (வேலூர்) தலா 8, பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி), நாகர்கோயில் (கன்னியாகுமாரி) தலா 7, வேலூர், விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), குடியாத்தம் (வேலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமாரி), செய்யூர் (செங்கல்பட்டு), சோலையார் (கோவை), கலவை AWS (ராணிப்பேட்டை) தலா 5, கொட்டாரம் (கன்னியாகுமாரி), தேக்கடி (தேனீ) ,திருவாலங்காடு (திருவள்ளூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 4, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கமுதி (ராமநாதபுரம்), பெருங்கலூர் (புதுக்கோட்டை), ராதாபுரம் (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, செங்கம் (திருவண்ணாமலை), திருவள்ளூர் தலா 3, நடுவட்டம் (நீல்கிரிஸ்), புதுக்கோட்டை தலா 2.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல் பகுதிகள்:

10.07.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

11.07.2021 முதல் 13.07.2021 வரை தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

11.07.2021 முதல் 12.07.2021 வரை மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.07.2021 முதல் 13.07.2021 வரை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

10.07.2021 முதல் 12.07.2021 வரை :, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10.07.2021 முதல் 14.07.2021 வரை :, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.07.2021 முதல் 14.07.2021 வரை: தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil