தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
X
தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. நாளை மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேகமாக வறண்ட வானிலயையும்‌ நிலவக்‌ கூடும்‌.

மேலும் வரும் 15 மற்றும் 16ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பறிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌. மேலும் அங்கு கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 16ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil