மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை கட்டணம் ரூ.50 : தென்னக இரயில்வே அறிவிப்பு

மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை கட்டணம் ரூ.50 : தென்னக இரயில்வே அறிவிப்பு
X

தென்னக ரயில்வே

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை சீட்டுக்கட்டணம் ரூ.50 க்கு விற்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 வசூலிக்கப்பட்டது.

ஜூன் 15ஆம் தேதியுடன் இது முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை அதாவது மேலும் 3 மாதங்களுக்கு நடைமேடை சீட்டுக்கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா பரவல் காரணமாக இ-பதிவு மூலமாக மட்டுமே ரயில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சில நேர மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டிகளில் காலை 11 மணி முதல் பகல் 12 வரையும், நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!