பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையம், அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
X

சென்னை  இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 04428339999 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும் குறைதீர்ப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனே அனுப்பி வைக்கப்படும்.

பெறப்பட்டதற்கான ஒப்புதல் அவர்களுக்கு உடனே அனுப்பபடும். மேலும் கோரிக்கை சம்பந்தபட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன் கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!