தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தனியார் பள்ளிகள் 75 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
X

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.

தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் மெட்ரிக் சிபிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தவிர கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து புகார் வராத வகையில் தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!