புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர் தகவல்
அமைச்சர் தங்கம் தென்னரசு
வள்ளுவர் கோட்டம் துணை மின்நிலையத்தில், மின்மாற்றி பழுது நீக்கும் பணியினை நிதி, மின்சாரம் மற்றும்மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு செய்தார்
இன்று (02.12.2023)சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள 110/11 கி. வோ. வள்ளுவர்கோட்டம் துணை மின் நிலையத்தில் உள்ள 16 எம்.வி.ஏ. உயரழுத்த மின்மாற்றியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுதுநீக்கும் பணியினை மின்சாரம் மற்றும் மனித வளமேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசுஆய்வு செய்தார்.
முன்னதாக, நிதி, மின்சாரம் மற்றும் மனித வளமேலாண்மைத் துறை அமைச்சர் சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும்நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ்லக்கானி, மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) மா.இராமசந்திரன், இயக்குநர் (பகிர்மானம்) இரா.மணிவண்ணன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு கீழ்கண்ட அறிவுறுத்தல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
1. மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மற்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24x7மணி நேரமும் பணியாற்றிட முறைப்பணி முறையில் உதவி செயற் பொறியாளர்கள்/உதவி பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிடவேண்டும்.
2.தமிழ்நாட்டிலுள்ள44மின்பகிர்மான வட்டங்களில் உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்களிலும்24x7மணி நேரமும் முறைப் பணி முறையில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.
3. மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதையும்மற்றும் தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
4. ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்டவாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்னமே கேட்டறிந்து அவைகளின் தயார் நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.
5. சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படவேண்டும்.
6. பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரியபள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
7. வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்கவேண்டும்.
8. மின்தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்கஅலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன்டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
9. உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்கவேண்டும்.
10. அனைத்துஅலுவலர்களும்தங்களது அலைபேசியினை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருப் பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார் அமைச்சர் தங்கம்தென்னரசு.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: எதிர்வரும் கனமழையை எதிர்கொள்ள, மேற்கொள்ளப் படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நம்முடைய முதலமைச்சர் அறிவுரையின்படி,மின்சாரத்துறை எல்லாவிதமானநடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதைப் போல் அசம்பாவிதங்கள் மற்றும் பேராபத்துக்கள் ஏதும்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அனைத்துமின்சாரவாரியஅதிகாரிகளுக்கும் அறிவுரைகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக,இந்த புயல்காலத்தில் மக்களுக்கு சீரான மின்சாரம் எந்தஇடத்திலும் தடைபடாமல் வழங்குவதற்கு வேண்டியஉத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறோம். மேலும், மருத்துவ மனைகள், குடிநீர்வழங்கல் வசதி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து தடையற்ற மின்சார ம்வழங்கநடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.
அதேபோல முதலமைச்சர் அறிவுரையினை ஏற்று இங்கு இருக்கக்கூடிய மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் நம்முடைய மின்வாரிய துறையின் அலுவலர்கள் பணியாளர்கள் களப்பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மாவட்டந்தோறும் இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு மையங்களில் மின்சார துறையின் பொறியாளர்கள்களப்பணியிலே இருக்கிறார்கள். அதேபோல், அந்தந்த செயற்பொறியாளர்களின்கீழ் பணியாளர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு தேவையான இடங்களில் பணிகள் மேற்கொள்ள இப்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனமழைமிகப் பெரும் கனமழையாக இருந்தாலும் சரி, புயலாக நம்மைக் கடந்து சென்றாலும் அதனை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 3,00,000மின்கம்பங்கள், 15,000கி.மீ.மின்கம்பிகள் மற்றும்15,000 களப்பணியாளர்கள் 24X7 தயார் நிலையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான தளவாடப்பொருட்கள் எந்நேரமும் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல கடலோர மாவட்டங்களில் குறிப்பாக கனமழை எதிர்ப்பார்க்கும் திருவள்ளுர் அல்லது சென்னை போன்ற இடங்களில் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மணலி போன்ற பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கடலோரபகுதிகளிலும் நம்முடைய மின்நிலையங் களிலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுமைக்கும் தேவையான ஜே.சி.பி., கிரேன் போன்ற வாகனங்கள் மற்றும் மரம்வெட்டும் இயந்திரங்கள் போன்ற உபகரணங்கள் தேவைக்கேற்ப தயாராக வைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்யப் பட்டுள்ளது. எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலையிலும் இந்தமழைக்காலத்தை எதிர்கொண்டு பொது மக்களுக்கு சீரான தடையற்ற மின்சாரம் வழங்குமாறு பார்த்துக் கொள்ளவும், அப்படியே ஏதாவது பழுதுஏற்பட்டாலும் அதனைஉடனடியாக நீக்கி மின்சாரம் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, இங்கே சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் 110 கி.வோ துணை மின் நிலையத்திலுள்ள உயரழுத்தமின்மாற்றியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக பழுதுநீக்கி இயக்கத்திற்கு கொண்டு வரும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, மின்வாரியத்தை பொருத்தமட்டில்தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படிமின்வாரியம்தயாராகஉள்ளது. இரவு நேரங்களில் குறிப்பாக மழைக் காலங்களில் ஏற்படும் மின்தடைக்கு புகார் அளிக்க மின்னகத்தில் ஒரே நேரத்தில் 65 அழைப்புகளை ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனைக் கண்காணிக்க தனியாக அலுவலர்களும் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சாலை ஓரங்களில் மழை நீர்தேங்கி மின்சாதனங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது மின்கம்பி அறுந்து விழுந்திருந்தாலோ உடனடியாக 24 மணி நேரமும் செயல் படக்கூடிய மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்திற்கு 94987 94987 என்ற எண்ணிற்கோ அல்லது மின்தடை நீக்கமையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறும், பொதுமக்கள் மழை காலங்களில் மின்சாதனங்களை பயன்படுத்துவதில் கவனத்துடன் செயல்படுமாறும் கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu