பொங்கல் பண்டிகை: 11ம் தேதியில் இருந்து 16,768 பேருந்துகள் இயக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போக்குவரத்துத்தறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது.
2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு , சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்களான மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் .பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து 11/01/2022 முதல் 13/01/2022 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் , பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16/01/2022 முதல் 18/01/2022 வரையில் , 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்
பயணச்சீட்டை முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும் , MEPZ ( தாம்பரம் சானிடோரியம் ) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான , www.tnstc.in , tnstc official app , www.redbus.in , www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது .
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450 , 94450 14436 ஆகிய தொலைபேசி மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 , 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொஆண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
அரசு பேருந்துகள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ள சாலையோரம் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் இருந்தால் அது குறித்து ஆய்வு நடத்தி உணவக உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu