12ம் வகுப்பு மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

12ம் வகுப்பு மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
X

பிளஸ் 2 மாணவிகள் மாதிரி படம் 

தமிழகத்தில் 12ம் மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்

சென்னை : தமிழகத்தில் 12ம் மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு நடைபெறாததால் 12ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண்கள், 10 மற்றும் 11ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீத மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தமிழகத்திலும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் கணக்கிடும் முறை தொடர்பாக தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும், 10 நாட்களுக்குள்ளாக மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, ஜூலை 31ம் தேதிக்குள் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிக்க என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

12ம் வகுப்பு மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:1 2ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களைச் சரிபார்த்து நாளை முதல் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். குறிப்பாக dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்'' என்று அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!