டாஸ்மாக் கடைகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு? சோகத்தில் குடிமகன்கள்

டாஸ்மாக் கடைகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு? சோகத்தில் குடிமகன்கள்
X

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு மது வகைகள் மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்டபடி சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்த பின்னரே கடைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மே மாதம் 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.அதன்பிறகு மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் சட்டவிரோதமாக அதிக விலை வைத்து விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இந்த குற்றங்களை பணியாளர்கள் மீது சுமத்தி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு, மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்டபடி, மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என்று சரிபார்க்க வேண்டும். அதன்பின்னரே கடைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பணியாளர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசின் பிற துறைகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களின் இந்த மனுவினால், டாஸ்மாக் கடைகள் திறக்க தாமதம் ஏற்படாலம் என்று கூறப்படுகிறது. இது மது பிரியர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story