கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை

கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை
X

கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்பாடு என்று சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்தார்.

கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை என சுகாதார இயக்குனர் தாரேஸ் அகமது தெரிவித்தார்.

கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை, இதனால் தடுப்பூசி வழங்கும் திட்டம் அனைத்து கிராமப்புறங்களுக்கும் விரைவில் கொண்டு செல்லப்படும் என சுகாதார இயக்குனர் தாரேஸ் அகமது தெரிவித்தார்

கர்ப்பிணிப் பெண்கள் கொரனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி அளித்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான கொரோனோ தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது இன்று துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனை இயக்குனர் விஜயா மற்றும் சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது பேசிய விஜயா, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், இதுவரை 300 பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முதல் அலையைவிட இரண்டாம் அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3ம் அலையில் குழந்தைகளுக்கு தாக்கம் ஏற்படலாம் என்ற தெரிவித்து வரும் நிலையில், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து தமிழகத்தில் உள்ள மருத்துவ வல்லுநர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் கர்ப்பிணிகளுக்கு எவ்வி பக்க விளைவுகளும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இதுவரை தடுப்பூசியை செலுத்திக்கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

தயக்கம் காட்டும் பெண்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க மருத்துவர்களும் உள்ளனர் என விஜயா தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய தாரேஸ் அகமது, கிராமபுற செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மூலம் கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் கொண்டு செல்லப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!