முகக்கவசம் இல்லையா? காய்கறி வழங்காதீர்கள்... சென்னை மாநகராட்சி ஆணையர்!

முகக்கவசம் இல்லையா? காய்கறி வழங்காதீர்கள்... சென்னை மாநகராட்சி ஆணையர்!
X

பொதுமக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தன்னார்வ தொண்டு நிருவனம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த தன்னார்வ நிறுவனம் சென்னை மெரினா முதல் ஆவடி வரை 32கி.மீ வரை உணவுகள் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காய்கறி,பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி சார்பில் 1500க்கும் மேற்பட்ட வாகனங்களில் 15மண்டலத்தில் 200வார்டுகளுக்கு பொருட்களை எடுத்து மக்களுக்காக விற்பனை செய்யப்படுகிறது .விற்பனை செய்வதற்கான அனுமதி கடிதம் வழங்கி உள்ளோம்.பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதல் வாகனத்தை இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பொதுமக்களும் வாகனத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யலாம், அதற்காக காவல்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி அளிக்க பரிந்துரை செய்வதற்கு கூறியுள்ளோம். ஆனால் கண்டிப்பாக அரசு அறிவித்து அறிவுரைகளை கடைப்பிடித்து விற்பனை செய்ய வேண்டுகிறோம்.

முகக்கவசம் அணியாமல் பொருட்களை வாங்க வருவோர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்வதற்கு தடை ஏதும் ஏற்பாட்டால் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.044-45680200 மற்றும் 9499932899 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

முன்களப் பணியாளர்கள், பால் வினியோகம் செய்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசிகள் போட கேட்டுக்கொள்கிறோம்..

45வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும், அதற்காக சென்னை மாநகரில் 176 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை பயன்படுத்தி அனைவரும் பயன்பெருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

18-45 வயதுடைய நபர்கள் உடலை முறையாக பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். முடியாத நபர்கள் நாங்கள் அறிவித்துள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் சார்பில், வீடில்லாத மக்கள், தெருவோரங்களில் தங்கியிருக்கும் மக்கள் ஆகியோருக்கு உணவு கொடுப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளோம். முறைப்படி மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுகிறோம். மேலும்,மாநகராட்சி சார்பிலும் உணவு கொடுத்து வருகிறோம் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்