மதுரை தலைமறைவு குற்றவாளி, வெளிநாடு தப்ப முயற்சி, சென்னை விமான நிலையத்தில் கைது

மதுரை தலைமறைவு குற்றவாளி, வெளிநாடு தப்ப முயற்சி, சென்னை விமான நிலையத்தில் கைது
X
மதுரையைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி வெளிநாடு தப்ப முயற்சித்து சென்னை விமானநிலையம் வந்தபோது கைது செய்யப்பட்டார்.

சென்னையிலிருந்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகா் செல்லும் ஏா் பிரான்ஸ் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது.அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை குடியுறிமை அதிகாரிகள் கம்யூட்டரில் பரிசோதித்து அனுப்பினா்.

அப்போது மதுரையை சோ்ந்த மீனாட்சி சுந்தரம்(39) என்பவா் பொறியாளா் பணிக்காக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வந்திருந்தாா்.

எல்லா பயணிகள் பாஸ்போா்ட்களை பரிசோதிப்பது போல்,அவருடைய பாஸ்போா்ட்டையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இவா் மதுரை மாநகர அனைத்து மகளீா் போலீசால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று கம்யூட்டரில் வந்தது.அதோடு அவா் மீது பெண்களுக்கெதிரான வண்கொடுமை வழக்கு ஒன்று இவா் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பதிவாகியுள்ளது என்றும் தெரியவந்தது.

இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை குடியுறிமை அதிகாரிகள்,தனியே அழைத்து திவீரமாக விசாரித்தனா்.அப்போது இவா் மீது பெண்களுக்கெதிரான குற்ற வழக்கு வழக்கு உள்ளது உண்மை என்று தெரிந்தது.

போலீசாா் கைது செய்ய தேடுவதால் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தாா்.போலீஸ் கைதிலிருந்து தப்பிக்க இவா் வெளிநாட்டிற்கு பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளாா்.

இதற்கிடைய மீனாட்சி சுந்தரம் வெளிநாட்டிற்கு தப்பி செல்லவிருக்கிறாா் என்பதை அறிந்த மதுரை அனைத்து மகளீா் போலீசாா்,மீனாட்சீ சுந்தரத்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து,

அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் LOC போட்டு வைத்துள்ளனா்.போலீசாரின் LOC பற்றி அறியாத மீனாட்சி சுந்தரம்,வெளி நாட்டிற்கு தப்பிவிட முயன்று தற்போது சிக்கிக்கொண்டாா் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மீனாட்சி சுந்தரத்தின் பயணத்தை ரத்து செய்தனா்.அதோடு அவரை கைது செய்து குடியுறிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனா்.

மேலும் கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்ற தகவலை மதுரை அனைத்து மகளீா் போலீசாருக்கு தெரிவித்தனா்.இதையடுத்து மதுரையிலிருந்து மகளீா் போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!