சட்டமன்றம்: ஆளுனரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெளிநடப்பு

சட்டமன்றம்: ஆளுனரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெளிநடப்பு
X

தமிழக சட்டமன்றம் (பைல் படம்)

ஆளுனரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

புத்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆளுநர் ரவி உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரை துவங்கிய உடன் வெளிநடப்பு செய்தனர்

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன்

சர்வதேச அளவில் கொரோனவை எதிர்கொள்வதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெரும் மசோதா இந்நேரம் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று இருக்க வேண்டும் தமிழக மக்களின் மனதை காயப்படுத்தும் ஆளுநரின் இந்த போக்கை கண்டித்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்ல ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

ஆளுநர் சட்டப்பேரவையில் தீர்மானிக்கப்பட்ட சட்ட முன்வடிவுகளை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் ஆளுநர் காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு எதிரானது என்றார்.

Tags

Next Story