தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி, கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி, கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம்: உயர்நீதிமன்றம் அறிவிப்பு
X

சென்னை உயர்நீதி மன்றம்

தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதி கடுமையாக இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்ட புதிய விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இடைக்கால நிவாரணம் பெற நீதிமன்றத்தை அணுகலாம் என்று டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷனுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக எழுந்து வரும்நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021யை கடந்த பிப்ரவரி மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.

இந்த விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சுய ஒழுங்குமுறை நடைமுறை இருக்க வேண்டும். மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளைச் சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தன்னிச்சையானது.செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இந்த விதியின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மனுதாரர் சங்கம், இடைக்கால நிவாரணம் பெற கோர்ட்டை அணுகலாம் என அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள்,

ஏற்கெனவே இந்தப் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கிருஷ்ணா தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!