புகார் அளித்தால் இடையூறு டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும், செந்தில் பாலாஜி

புகார் அளித்தால் இடையூறு டாஸ்மாக் கடைகள்  அகற்றப்படும், செந்தில் பாலாஜி
X

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த சீரமைப்பு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார்.

புகார் அளிக்கப்பட்டால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் உடன் மின், கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆலோசனை நடத்தினார். இதில் டாஸ்மாக் துறை நிர்வாக சீரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, வாடிக்கையாளர்கள் புகார்கள் தொடர்பாக 529 டாஸ்மாக் கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 1702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட நேரங்களை விட கூடுதலான நேரங்களில் விற்பனை இருக்க கூடாது, மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் அகற்ற கோரி பொதுமக்களிடம் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ்நாடு முழுவதும் விதிகளை பின்பற்றாத 724 பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன, 6 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,

கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய் ஈட்டுவது நோக்கம் அல்ல. அரசுக்கு நல்ல பெயர் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். மேலும், டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைப்பு போன்ற கொள்கை முடிவு விவகாரங்களில் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!