கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் ஆராய்ச்சி படிப்புக்கு தமிழக அரசு அனுமதி
உயர்கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்குவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
அதன்படி கல்லுாரிகளில் 10 பாடப்பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி படிப்புகளை நடத்த அனுமதித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை:
தமிழக சட்டப் பேரவையில், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நடந்த உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர்கள் நலன் கருதி முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளை நடத்த செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம் மற்றும் திருப்பூர் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் புதியதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு ஏற்ப, மேற்கண்ட கல்லுரிகளில் ஏற்கெனவே முதுநிலை மற்றும் முதுஅறிவியல் பாடப்பிரிவுகள் அந்த கல்லுாரிகளில் செயல்பட்டு வருகின்றன. எனவே, செங்கல்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், சேலம் கல்லுாரியில் தாவரவியல், கோவையில் தகவல் தொழில் நுட்பம், நாமக்கல் கல்லுாரியில் விலங்கியல், திருச்சி பெரியார் கல்லுாரியில் உயிர் வேதியியல், திண்டுக்கல் ஆங்கிலம், கும்பகோணம் இயற்பியல், கோவில்பட்டி தமிழ், சென்னை நந்தனம் ஆங்கிலம், திருப்பூர் சர்வதேச வணிகம் ஆகிய பாடங்களில் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக ஆராய்ச்சி படிப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அரசானையில் கூறப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu