நீட் விலக்கு மசோதோவை ஒப்புதலுக்கு அனுப்பாத ஆளுநர்: விடுதலைச் சிறுத்தைகள்வெளிநடப்பு
சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச்செல்வன்
நீட் விலக்கு மசோதோலை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ -க்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரை தொடக்கி வைத்து தமிழக ஆளுநர் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளுநர் உரை தொடங்கிய உடன் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சர்வதேச அளவில் கொரோனவை எதிர்கொள்வதில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெரும் மசோதா இந்நேரம் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று இருக்க வேண்டும்.
தமிழக மக்களின் மனதை காயப்படுத்தும் ஆளுநரின் இந்த போக்கை கண்டித்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்ல, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். ஆளுநர் சட்டப்பேரவையில் தீர்மானிக்கு சட்ட முன்வடிவுகளை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் ஆளுநர் காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு எதிரானது.தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை இருட்டடிப்பு செய்வது வேதனை அளிக்கிறது என்றார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu