ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு சார்பில் இலவச சட்ட ஆலோசனை முகாம்

ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு சார்பில்  இலவச சட்ட ஆலோசனை முகாம்
X

சென்னை எழும்பூரில்  ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் பவுண்டேசன் சார்பில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை  ஆநடைபெற்றது.

ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு சார்பில் எழும்பூரில் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது.

சென்னை எழும்பூரில் தனியார் வளாகத்தில் ரெட் ஐ ஹியூமன் ரைட்ஸ் பவுண்டேசன் அமைப்பின் மூலமாக பொதுமக்களுக்கு அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மூலம் இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, ஆன்லைன் மோசடி,மற்றும் நிலமோசடி உள்ளிட்ட 13 வகையான சட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்டந்தோறும் பொதுமக்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என அமைப்பின் பொதுச்செயலாளர் கண்மணி தெரிவித்தார்.

அமைப்பின் சட்ட குழு தலைவர் வழக்கறிஞர் ஜனா, மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக சட்ட விழிப்புணர்வு ஆலோசனை வழஙகப்பட்டது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?