முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா : எச். ராஜா பங்கேற்பு

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்  பிறந்த நாள் விழா : எச். ராஜா பங்கேற்பு
X

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா

நங்கநல்லூர் மண்டலபகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் எச். ராஜா கலந்து கொண்டார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு நல்லாட்சி தினமாக தமிழகத்தில் பாஜகவின் கொண்டாடி வருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நங்கநல்லூர் மண்டல பகுதியில் கிளைகள் தோறும் அடல்பிகாரி வாஜ்பாயின் புகைப்படம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறுகையில்,

இங்கிலாந்து,அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது உலகம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் அலை பரவல் போது இந்தியாவில் மக்கள் பிரதமரின் அறிவுறுத்தலின்படி ஊரடங்கு மற்றும் கொரோனா வழிமுறைகளை கடைபிடித்ததால் பெரும் பாதிப்பை தவிர்க்கப்பட்டது. அதே போல் தற்போதும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஆதார் கார்டை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை எதனால் முதல்வர் ஸ்டாலின்,திருமாவளன் போன்றவர் அதனை பெரிது படுத்துகின்றனர்.

ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டை இணைப்பதற்கு யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரோ அந்த கட்சியை எல்லாம் மக்கள் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.

அவர்களெல்லாம் ஆள தகுதி இல்லாதவர்கள், தேசப் பற்று இல்லாதவர்கள் இவர்களை மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும்.

பாஜகவினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக உள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவு,உடை போன்றவற்றை வழங்கும் பல்வேறு நலத்திட்ட பணிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினரை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தாக்கியது குறித்து கேட்டதற்கு, வன்முறை என்பது இரு முறை கத்தி அதை யாருக்கு எதிராக நீ பயன்படுத்தினாலும் அது இன்னொரு இடத்தில் உனக்கு எதிராக திரும்பும் திமுகவினர் அராஜகங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் இவ்வறு கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!