/* */

பழனி முன்னாள் எம்எல்ஏ மறைவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பழனி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பழனி முன்னாள் எம்எல்ஏ மறைவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பழனி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உடல்நலக் குறைவால் இறந்தார் என்பதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

கடந்த 2006 –2011 ஆட்சியின் போது, திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். அவரது மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும்.

அன்பழகனை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 11 Jun 2021 10:40 AM GMT

Related News