ஜுஸ் கொடுத்து மநீம வேட்பாளர் எழும்பூரில் வாக்கு சேகரிப்பு

ஜுஸ் கொடுத்து மநீம வேட்பாளர்  எழும்பூரில் வாக்கு சேகரிப்பு
X
ஜூஸ் கொடுத்து எழும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஓட்டு கேட்பு

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் பிரியதர்ஷினி ஜுஸ் போட்டு கொடுத்து அங்குள்ளவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், வர்த்தகர்கள், மீனவர்கள் என தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

எழும்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி, கடை ஒன்றில் ஜுஸ் போட்டு கொண்டிருந்த கடைக்காரிடம் அதற்கான செய்முறை விளக்கத்தை கேட்டார். பின்னர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஜுஸ் போட்டு கொடுத்து அங்குள்ளவர்களிடம் டார்ச் லைட் சின்னத்துக்கு ஆதரவு கேட்டார்.

கடந்த 60 ஆண்டுகளாக எழும்பூர் தொகுதியில் பெண்கள் யாரும் சட்டமன்ற உறுப்பினராக வரவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். முதல்வராக யார் வரவேண்டும் என்பதை பார்க்காமல் சட்டமன்ற உறுப்பினரை என்னை மனதில் வைத்து தனக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Tags

Next Story