தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117-வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் மரியாதை
சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை செய்த அமைச்சர்கள்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117-வது பிறந்த நாள் விழாவையொட்டி உருவப்படத்துக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், சாமிநாதன் மலர் தூவி மரியதை செலுத்தினர்.
தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மாஃபா பாண்டியராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், சமத்துவ கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாலை முரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம், மற்றும் பல்வேறு நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu