கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைப்பு
அமைச்சர் சேகர் பாபு
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சி எஸ் ஐ எவர்ட் பள்ளியில் 15 முதல் 18 வயத்தினருக்கான கோவிட் தடுப்பூசி போடும் முகாமினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி, எழும்பூர் சட்டன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "ஒன்றிய அரசின் வழிகாட்டுதளுடன் தமிழக முதல்வர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 15 வயது முதல் 18 வயத்தினருக்கான தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். 3 ஆம் அலை நம்மை நெருங்கிக்கொண்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் கோவிட் தொற்றுக்கு இழக்கப்பட்டு வந்த நிலையில் அதனை முதல்வர் தனது சீரிய முயற்சியால் குறைத்தார்.
சென்னையில் தடுப்பூசியை மக்கள் அதிகம் எடுத்துக்கொண்ட காரணத்தால் தற்போது கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அதனால் உயிர்பலி என்பது பெரிய அளவில் இல்லாமல் உள்ளது
92% மக்கள் சென்னையில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 71% பேர் சென்னையில் இரண்டாம் தவணை போட்டுக்கொண்டுள்ளனர்.
3.11 லட்சம் பேருக்கு சென்னையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 6.64 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னையில் கையிருப்பில் இருக்கிறது.
இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்துவதில் சென்னை மாநகராட்சி தான் முதல் இடத்தில் உள்ளது. முந்தைய காலங்களில் கோவிட் தொற்று தடுப்பை பொறுத்தவரை கேரளாவை எடுத்துக்காட்டாக சொல்லி வந்தார்கள். இப்போது முதல்வர் ஸ்டாலினை எடுத்துக்காட்டாக சொல்லி வருகிறார்கள்," என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu