கொரோனா இறப்பை குறைத்து காட்டவில்லை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கொரோனா புறநோயாளிகள் பிரிவு , கட்டுபாட்டு மையம், இறப்பு சான்றிதழ் திருத்தம் மேற்கொள்ளும் மையம் , படுக்கை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அவர் கூறியதாவது.
தமிழ்நாடு முதல்வர் கொரோனா குறைந்தாலும் போர்கால அடிப்படையில் பணிபுரியவேண்டும் என்று கூறியுள்ளார்.சராசரியாக 1.6லட்சம் மாதிரிகள் எடுக்கப்படுகிறது 4200என்ற அளவில் பாதிப்பு குறைந்துள்ளது எனவும் தளர்வுகளை தொடரவேண்டுமானால் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்,சமூக இடைவெளி, கைகழுவுதல், முககசவம் உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
காய்ச்சல் கண்காணிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறார்கள்.கண்காணிப்பு பணிகளை மாவட்ட வாரியாக பிரித்து தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
சில இயக்கங்கள் அரசு கொரோனா இறப்பை மறைப்பதாக சொல்கிறார்கள் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அரசின் சார்பில் வழங்கப்படும் இறப்பு சான்றிதழில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை என்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சான்றிதழில் இறப்பின் காரணம் மாற்றி எழுதப்பட்டிருந்தால் ஐசிஎம்ஆர் விதிகளின்படி கட்டளை மையம் மூலம் திருத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
டெங்குவை ஒழிக்க மக்கள் ஒத்துழைத்தது போல அரசோடு ஒத்துழைத்து உலகளாவிய கொரோனா நோயை ஒழிக்கவேண்டும் என்றும் தமிழ்நாட்டில் டெல்டா+ 10பேருக்கு தான் பாதிப்பு வந்துள்ளது.டெல்டா கொரோனா ஏப்ரல் மே மாதத்தில் தமிழ்நாட்டில் வந்துவிட்டது.கொரோனா
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்கிறோம்.ஒரு சில மாவட்டங்களில் 5% பாதிப்பு உள்ளது ஏனைய மாவட்டங்களில் 3%குறைவாக உள்ளது என குறிப்பிட்டார்.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கபட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் இன்று துவங்கி வைக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu