கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: சுகாதாரத்துறை செயலர் விளக்கம்

கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல்: சுகாதாரத்துறை செயலர் விளக்கம்
X

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (பைல்படம்)

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையை ஆய்வு செய்தபிறகு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், மூன்றாவது அலை குழந்தைகளை மட்டும் பாதிக்கும் என்பது உண்மையல்ல என்றும் இரண்டாம் அலை மற்றும் முதல் அலையிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!