பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, ஆளுநரிடம் மனு அளித்த காங்கிரஸ்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ( பைல் படம்)
பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர்,ஜோதிமணி, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் :
தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் டீசல் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆளுநரை நேரில் சந்தித்து பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை குறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றுள்ளது, இதனை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பி வைக்க உள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu