சிஎம்டிஏவில் உதவி திட்ட அதிகாரி, திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலி

சிஎம்டிஏவில் உதவி திட்ட அதிகாரி, திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலி
X
சிஎம்டிஏவில், உதவி திட்ட அதிகாரி, திட்ட உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிஎம்டிஏவில் நிர்வாக ரீதியான, 131 அமைச்சு பணியாளர்களுக்கான இடங்களை நிரப்ப, 2020 அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு, கடந்த 2021 பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.தேர்தல் நடைமுறைகள் வந்த நிலையில், இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதாக புகார் உள்ளது. இதையடுத்து, தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

சிஎம்டிஏவில், தற்போது 17 உதவி திட்ட அலுவலர், 72 திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது தவிர வரைவாளர், சட்ட அலுவலர் போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளது.இந்த இடங்களை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, சிஎம்டிஏவில் 'ஆன்லைன்' முறையிலான கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு