சென்னை: புரசைவாக்கத்தில் ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் நிவாரண பொருள்கள்!

சென்னை: புரசைவாக்கத்தில் ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் நிவாரண பொருள்கள்!
X

சென்னை புரசைவாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சென்னை புரவைவாக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் இந்தியா முழுவதும் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்பேரிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்படி ந சென்னை புரசைவாக்கத்தில் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர். நிவாரண பொருட்களாக ரூ.2000 மதிப்புள்ள மளிகை மற்றும் அரிசி வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா, மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், பொன் கிருஷ்ணமூர்த்தி, மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, மற்றும் கே.எம்.இக்பால் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்