சென்னை ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு

சென்னை ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு
X

பைல் படம்.

தொழில்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சீருடையுடன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சில தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19- தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, முதுநிலை பயிற்சி மாணவர்கள், அவர்கள் பயிற்சி பெறும் தொழில்பயிற்சி நிலையங்களில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன் இந்த கல்வியாண்டில் ஆகஸ்டு மாதம் வரை சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்டு மாதம் வரை மாணவர்களை அனுமதிக்குமாறு அனைத்து நடத்துனர்களுக்கும் போக்குவரத்துத்துறை சென்னை மண்டல துணை மேலாளர் உத்தரவிட்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil