ஜூன் 11ம்தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரணை:சென்னை உயர்நீதிமன்றம்

ஜூன் 11ம்தேதி வரை அவசர வழக்குகள் மட்டும் விசாரணை:சென்னை உயர்நீதிமன்றம்
X

சென்னை உயர்நீதிமன்றம்

ஜூன் 11ம் தேதி வரை அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலின் 2வது அலை தமிழகத்தில் தீவிரம் அடைந்தது. இதனால் நீதிமன்றங்களில் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றம் திறக்கப்பட இருந்த நிலையில், அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐகோர்ட் நீதித்துறை பதிவாளர் எம்.என். செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படும்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிசன் பெஞ்ச் ஜூன் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வழக்குகளை விசாரிக்கும்.

ஜூன் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் ரிட் வழக்குகளையும், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கும்.

மேலும் நீதிபதிகள், ஆர்.மனோகரன், ஆர்.சுப்பிரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர் ரிட் வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிப்பார்கள்.

ஜூன் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நீதிபதிகள் என்.கிருபாகன், டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் கொண்ட டிவிசன்பெஞ்ச், நீதிபதிகள் வி.பார்த்திபன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.

ஜூன் 9ந் தேதி முதல் 11ம் தேதி வரை நீதிபதிகள் டி.ராஜா, வி.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், நிதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அப்துல்குத்தூஸ், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.

மதுரை கிளையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஆர்.தாரணி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், ஏ.ஏ.நக்கீரன், பி.டி.ஆதிகேசவலு, ஜி.ஆர்.சுவாமிநாதன், சந்திரசேகரன் ஆகியோர் மூன்று பிரிவுகளாக வழக்குகளை விசாரிப்பார்கள்.

ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதே நீதிபதி முன்புதான் மீண்டும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஜாமீன் ரத்து கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களும் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself