சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை ஆலோசனை கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில்   வேளாண் துறை  ஆலோசனை கூட்டம்
X

பைல் படம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண் துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

2021-22 ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தயாரித்தல் தொடர்பாக வேளாண் வர்த்தகர்கள் சங்கம் மற்றும் வேளாண் ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் விவசாயத்தில் முன்னேற்றம் கொண்டு வருவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வேளாண் வர்த்தகம் மூலம் விவசாயம் மேம்பட நல்ல கருத்துக்களை வழங்கியள்ளனர்.

விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் வேளாண் நிதி நிலை அறிக்கை இருக்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக உழவர் சந்தைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய உழவர் சந்தைகள் திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பயிர் கொள்முதல் வீனாகாமல் தடுக்க தேவையறிந்து மாவட்டங்களில் வேளாண் உற்பத்தி கிடங்குகள் உருவாக்கப்படும்.

வேளாண் துறையில் ஆர்வமுள்ள படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!