கொரோனாவை கட்டுப்படுத்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம்- சென்னை மாநகராட்சி அழைப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த ஒப்பந்த டாக்டர்கள் நியமனம்- சென்னை மாநகராட்சி அழைப்பு
X
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்காக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, மருத்துவ மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

அவ்வகையில், சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட ஏதுவாக, மருத்துவம் பயிலும் மாணவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, பயிற்சி மருத்துவர் பணிக்கு ரூ.40,000 மாத சம்பளத்தில் 3 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தற்காலிக அடிப்படையில் 300 பயிற்சி மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!