தமிழகத்தில் 7 மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில்கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்
X

பைல் படம்

கடலோர மாவட்டங்கள்,புதுவை, காரைக்கால் பகுதிகளில்இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ,சென்னையை பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி, கோவை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story